லண்டன் சொகுசு வீட்டை விற்று தனக்கே அண்ணனான மஹிந்தானந்த
பிரித்தானியாவில் ஆடம்பர வீடொன்றை கொள்வனவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் அதனை விற்பனை செய்ததாக செய்தி வெளியாகியிருந்தது. லண்டன் நகரிலுள்ள குறித்த வீட்டினை 320,000 பவுண்டுக்கு கொள்வனவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இதனை முற்றாக மறுத்திருந்த அளுத்கமகே, தனது சகோதரர் ஒருவர் ஜப்பானில் உள்ளார் எனவும், அவரே லண்டனில் வீடொன்றை கொள்வனவு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் குறித்த சொத்தின் உறுதி பத்திரத்தில் மஹிந்தானந்தவின் பெயரில் உள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஹிந்தானந்தவின் சகோதரரனின் பெயரும் மஹிந்தானந்தவாக காணப்பட வேண்டும், இல்லை என்றால் மஹிந்தானந்த தனக்கு தானே அண்ணனாக இருக்க வேண்டும்.
கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்திற்கு பதிலளிக்கும் போது, ஜப்பானில் எனது அண்ணன் ஒருவர் உள்ளார், விஜயானந்த அளுத்கமகே என்பதே அவரது பெயராகும். அவர் பிரித்தானியாவில் வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார் என மஹிந்தானந்த குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கிடைத்துள்ள தகவல்களுக்கமைய Flat 4, Blyton House, 19-23 Sydenham Hill, London என்ற விலாசத்தில் உள்ள சொத்து அம்கஹாபொலகே ஆஷா விஜயந்தி அலுத்கமகே மற்றும் மீதலாவே மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய இருவரின் பெயரிலேயே உள்ளது.
அப்படியிருக்கும் போது அது அண்ணாவின் சொத்து என எவ்வாறு கூறுகின்றார் என்பது சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ளது. நாடாளுமன்றத்தினுள் போலி கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடுவது பாரிய குற்றச் செயலாகும்.
அதேவேளை லண்டனில் 320,000 பவுண்டிற்கு சொத்து ஒன்றை கொள்வனவு செய்யும் அளவிற்கு மஹிந்தானந்தவுக்கு பணம் எவ்வா கிடைத்ததென்பதே தற்போது பாரிய பிரிச்சினைகளில் ஒன்றாகியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply