யாழ் போதனாவைத்தியசாலையில் குடும்பஸ்தர் மர்மமரணம்!! உறவினர்கள் கடும் குழப்பம்!

3 நாள் காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையின் 7ம் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 58 வயதான செல்லத்துரை தேவராசா என்ற 4 பிள்ளைகளின் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று இரவு உயிரிழந்தாலும் தொடர்ந்து இவர் ஆரோக்கியமான நிலையில் எல்லோருடனும் உரையாடியபடியும் சாதாரண நிலையிலும் காணப்பட்டதாகவும் நேற்று இரவு கொடுக்கப்பட்ட மருந்தின் பின் அவர் அவசர சிகிச்சைப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு கொடுக்கப்பட்ட மருந்து தொடர்பாக உறவினர்கள் தற்போது குழப்பமடைந்துள்ளனர். இவர் தங்கியிருந்த காலப்பகுதியில் எந்த ஒரு விசேட மருத்துவரும் அங்கு வரவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவரது சடலத்தை மரணவிசாரணையின் பின்னரே கையளிக்க முடியும் எனவும் தெல்லிப்பளைப் பொலிசார் வந்த பின்னரே இவரது மரணவிசாரணை நடவடிக்கை தொடங்கி சடலம் கையளிக்கப்படும் எனவும் உறவினர்களுக்கு தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை அங்கு நின்ற உறவினர் ஒருவர் குறித்த உயிரிழப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்  தேவராசா என்ன காய்ச்சலால் உயிரிழந்தார் என்பதை அறிய முடியாத நிலையில் யாழ் போதனாவைத்தியசாலை இருக்கின்றது என்பதை நினைக்க மிக வேதனையாக உள்ளது. அத்துடன் தேவராசா தனியார் வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுனர் ஒருவரிடம் பதிவு செய்து யாழ்; போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர் சில வேளை தப்பித்திருப்பார் எனவும் கவலை தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலiயில் கட்டங்களை நன்றாக கவனிக்கும் வைத்திசசாயை நிர்வாகம் நோயாளர்களைக் கவனிக்கத்தவறியுள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தேவாராஜா வலி வடக்கில் மீள் குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் ஆழமாக ஈடுபட்ட ஒருவர் எனவும் மயிலிட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் மயிலிட்டியை படையினரிடம் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையில் அப்பகுதியில் வாழ்ந்த மக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply