பூநகரிப்பாதை வெகுவிரைவில் திறக்கப்படும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா

பூநகரிப்பாதை வெகுவிரைவில் திறக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 
 
ஏ௩2 பாதை இந்தியப் படையினர் வெளியேறிய பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாகக் குறிப்பிட்ட இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 20 வருடங்களுக்குப் பின்னர் இந்தப் பாதை வெகுவிரைவில் திறக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார். 

பூநகரிப் பாதையை திறப்பதற்கு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிலோ மீற்றர் நிலப்பரப்பை மீட்க வேண்டியுள்ளது. அடுத்த சில தினங்களுக்குள் இந்தப் பாதை படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். இதற்கான இராணுவ நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பூநகரிப் பாதையை திறப்பதன் மூலம் யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் 43000 படையினரும் விடுமுறையில் பஸ் வண்டிகளில் வந்து செல்ல வாய்ப்பாக அமையும். கப்பல்கள் விமானங்கள் மூலம் அவர்கள் விடுமுறைகளில் செல்வதால் அதிகளவான செலவும் கால தாமதமும் ஏற்படுகிறது என்றார் அவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply