மஹிந்தவுடன் அப்பம் சாப்பிட்ட மைத்திரி, ஐ.தே.கட்சிக்காக செயற்படுகிறார்: ஜோன்ஸ்டன்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து தன்னை நீக்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவியதற்கே இவ்வாறு கூறியுள்ளார்.

தன்னை இப்பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பில் ஆச்சரியப்பட மாட்டேன். அதேபோன்று கவலை கொள்ளவுமில்லை. மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்து அப்பம் சாப்பிட்டு விட்டுச் சென்ற மைத்திரிபால சிறிசேன, செய்வதெல்லாம் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் விடயங்களைத் தான்.

மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இதனைவிடவும் ஒன்றை நாம் எதிர்பார்க்கவில்லை. நாம் மஹிந்தவுடன் இருப்பதை மைத்திரிபால சிறிசேன விளங்கிக் கொண்டமையையிட்டு நாம் விசேடமாக சந்தோஷப்படுகின்றறோம்.

நாம் அன்றும், இன்றும் என்றும் மஹிந்தவுடனே. மைத்திரிபால சிறிசேன, கட்சியிலுள்ள மக்களின் தலைவர்களை நீக்கிக் கொண்டு செல்கின்றார். தேர்தல் ஒன்று வந்தால் இதன் பிரதிபலனை கண்டுகொள்வார். நாம் மைத்திரிக்கும் ரணிலுக்கும் சொல்கின்றோம், முடியுமானால் தேர்தல் ஒன்றை வையுங்கள்.

முதுகெலும்பில்லாதவர்கள் எல்லாம், கட்சியின் தலைமைத்துவத்தை எடுத்துக் கொண்டனர். நாம் பதவிகளுக்கு தலைசாய்க்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் சுயரூபத்தை மக்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். தேர்தல் வந்தால், இவர்களுக்கு மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply