நாளையும், நாளை மறுதினமும் மதுபானசாலைகள் மூடப்படும்- அரசாங்கம்

தமிழ், சிங்கள புத்தாண்டு தினங்களான நாளையும் (13) நாளை மறுதினமும் (14) நாடு முழுவதிலுமுள்ள மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறி செயற்படும் மதுபானசாலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மதுபானசாலை மூடப்படும் குறித்த இரு தினங்களிலும், கலால் திணைக்கள அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். எல்லா அரசாங்கங்களும் நாட்டு மக்களை மதுபானப் பயன்பாட்டைத் தடுப்பதற்கு இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை வரவேற்புக்குரியது.

இருப்பினும், மதுபானம் தொடர்பான சிந்தனை மற்றும் அது பற்றிய பாதிப்புக்கள் என்பன குறித்து சிந்தனா ரீதியிலான மறுமலர்ச்சியொன்றும் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் நாட்டில் ஓரளவாவது மதுவை வெறுக்கச் செய்யலாம்.

எதிர்வரும் இரு தினங்களுக்கு மதுக்கடை மூடப்படும் எனும் செய்தி ஊடகங்களில் முந்திய தினங்களே அறிவிக்கப்படுகின்றது. இந்த அறிவிப்பானது, எதிர்வரும் இரு தினங்களுக்கும் தேவையான மதுபானங்களை இன்றே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது போலவும் அமையப் பெற்றுள்ளது.

கடை மூடுவதனால் மாத்திரம் மதுப் பாவனையை ஒழிக்க முடியாது என்பது சாதாரண குடிமகனாலும் புரிந்துகொள்ள முடியுமான ஒர் உண்மையாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply