சவுதி அரேபியாவில் உருவாகிறது உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நகரம்
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் எல்லையில் உலகின் முன்மாதிரியான பொழுதுபோக்கு நகரம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது. 334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த பொழுதுபோக்கு நகரம், கலாசாரம், விளையாட்டு மற்றும் மகிழ்ச்சியாக பொழுதுபோக்கும் செயல்பாடுகளுக்கான இடமாக அமையும் எனவும், சிக்ஸ் ஃப்ளாக் பூங்கா மற்றும் சஃபாரி பூங்காவும் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் முதல்முறையாக அம்மாதிரியான நகரம் அமையவுள்ளதாக அந்த திட்டத்திற்கான அறிவிப்பில் பெருமையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொழுதுபோக்கு நகரத்திற்கான கட்டுமானப் பணி 2018-இன் தொடக்கத்தில் தொடங்கி, கட்டுமானப் பணிகள் 2022-ஆம் ஆண்டில் நிறைவடையும் என துணை இளவரசர், முகமது பின் சல்மானால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரசு, பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவது மற்றும் பல்வேறு திட்டங்களால் எண்ணெய் வருமானத்தை மட்டும் சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், பல வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் இலக்காக கொண்ட விஷன் 2030, என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நகரம் அமைய இருக்கிறது என்றும் இத்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply