ஜ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மைத்திரி அரசு இப்போதும் அசமந்தமே : சிவில் அமைப்புக்கள் குற்றச்சாட்டு

இலங்கை அரசு அர­ச­மைப்பு உரு­வாக்­கப் பணி­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­துச் செயற்­ப­டு­வ­தால், ஐ.நா. தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வது தொடர்­பில் அச­மந்­தப் போக்­கில் செயற்­ப­டு­கின்­றது. தீர்­மா­னம் நிறை­வேற்ற முன்­ன­ரும் இவ்­வா­றான நிலையே தொடர்ந்­தது. தீர்­மா­னம் நிறை­வேற்­றிய பின்­ன­ரும் அவ்­வா­றான நில­மையே தொடர்­கின்­றது. இவ்­வாறு நல்­லி­ணக்க கலந்­தா­லோ­ச­னைச் செய­ல­ணி­யின் செய­லர் பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து தெரி­வித்­தார்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை அர­சுக்கு மேலும் இரு வருட கால அவ­கா­சம் வழங்­கு­வ­தற்கு சிவில் அமைப்­புக்­க­ளும் இணங்­கி­யி­ருந்­தன. இலங்­கைக்­குக் கால அவ­கா­சம் வழங்கித் தீர்­மா­ன­மும் நிறை­வேற்­ற் பட்­டி­ருந்­தது.

தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்டு மூன்று வாரங்­கள் கடந்­துள்ள நிலை­யில், இலங்கை அரசு தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­கள் மேற்­கொண்­டுள்­ளதா, இது தொடர்­பில் சிவில் சமூ­கத்­து­டன் ஏதா­வது ஆராய்ந்­துள்­ளதா என்­பது தொடர்­பில் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்­தார். அவர் மேலும் கூறி­ய­தா­வது,

இலங்கை அரசு ஐ.நா. தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இது­வரை எந்த முயற்­சி­யும் எடுக்­க­வில்லை. அது தொடர்­பில் அக்­கறை கொள்­ளாது இருக்­கின்­றது. அர­ச­மைப்பு உரு­வாக்­கப் பணி­கள் தொடர்­பில் கவ­னம் செலுத்­து­கின்­றது. ஐ.நா. தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வது தொடர்­பில் அச­மந்­தப் போக்­கில் செயற்­ப­டு­கின்­றது.

ஐ.நா. தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட முன்­ன­ரும் இவ்­வா­று­தான் செயற்­பட்­டது. அதன் பின்­ன­ரும் அவ்­வா­று­தான் இயங்­கு­கின்­றது. சிவில் அமைப்­புக்­கள் இலங்கை அர­சுக்கு அழுத்­தம் கொடுக்­கும் வகை­யில்­தான் செயற்­ப­டு­கின்­றன. தொடர்ந்­தும் அழுத்­தம் கொடுக்­கின்­றன – என்­றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply