சிகரெட் புகைப்பவர் எண்ணிக்கை அதிகரிப்பு உலக சுகாதார நிறுவனம்

சிகரெட் புகைப்பது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும். புற்றுநோய், உள்ளிட்ட பல்வேறு உயிர்க்கொல்லி நோய்கள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும், உலகம் முழுவதும் சிகரெட் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அது குறித்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா. வளர்ச்சி திட்டம் இணைந்து சமீபத்தில் சிகரெட் புகைப்பவர் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சீனாவில் தான் புகை பிடிப்பவர்கள் மற்றும் புகையிலை உபயோகிப்பவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் சிகரெட் மற்றும் பீடி புகைப்பவர் மற்றும் புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. அங்கு நாள் தோறும் 50 சதவீதம் பேர் சிகரெட் பிடிக்கின்றனர்.

அவர்களில், ஆண், பெண் என 28 சதவீதம் பேர் அடங்குவர். அங்கு ஒரு சிகரெட் பாக்கெட் விலை 10 யுவான் ஆகும். சில்லரை விற்பனையில் சிகரெட் விலை அதிகரித்து கொண்டே இருந்தாலும் விற்பனை கூடிக் கொண்டே செல்கிறது.
இதனால் கடந்த 2015-ம் ஆண்டு மட்டும் புகையிலை மூலம் ரூ.1 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது. அதே வேளையில் புகை சம்பந்தமான நோயினால் உயிரிழப்போர் எண்ணிக்கை யும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதே நிலை நீடித்தால் சீனாவில் இந்த நூற்றாண்டு இறுதிக்குள் புகைப்பழக்கத்தினால் மட்டும் 20 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம் உருவாகும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply