இலங்கை குப்பமேட்டில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்வு
இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு அருகே மீதோட்டமுல்லா பகுதியில் உள்ள குப்பை கிடங்கு சரிந்து விழுந்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. மீதோட்டமுல்லா குப்பை மேட்டிற்கு அருகே ஏராளமான மக்கள் குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வந்த போது குடிசைக்கு அருகேயுள்ள குப்பை மேட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து எரிந்த நிலையில் இருந்த குப்பைகள் சரிந்து குடிசைகளுக்கும் பரவியது.
இதில் பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். இதையடுத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்ட பேரிடர் மீட்புப் படை காயமடைந்தவர்களை மருத்தவமனையில் சேர்த்திருந்தது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்துள்ள 30 பேரில் 7 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அப்பகுதியில் உள்ள 180 வீடுகளில் தங்கியிருந்த சுமார் 625 பேர் மாற்று இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இருந்து மீண்ட மக்கள், இந்த விபத்திற்கு அரசியல்வாதிகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். கொலோனோவா பகுதியில் 23 மில்லியன் டன் குப்பைகள் நிறைந்துள்ளதாக இலங்கை பாராளுமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கு தினமும் 800 டன் குப்பை கொட்டப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply