3 மாத குழந்தைக்கு சம்மன்: அமெரிக்க தூதரகம் வழங்கியது

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த பெண் பயே கென்யன்- கெய்ர்ன்ஸ். இவரது 3 மாத குழந்தை ஹார்வி கென்யன்-கெய்ர்ன்ஸ்.இவன் தனது தாயாருடன் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஓர்லண்டோவுக்கு விமானத்தில் பயணம் செய்தான். அதற்காக குழந்தை ஹார்விக்கு ‘விசா’ எடுக்கப்பட்டது.அதில், நீங்கள் தீவிரவாத நடவடிக்கைகள், உளவு பார்த்தல், நாசவேலையில் ஈடுபடுதல் மற்றும் இனப்படுகொலை போன்றவைகளில் ஈடுபட்டவரா? என கேட்கப்பட்டிருந்தது. அதற்கு எதிரே தவறுதலாக ‘ஆம்’ என்ற வாசகத்தை அவனது தாத்தா குறியீட்டு விட்டார்.
இதனால் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர். இதுகுறித்து விசாரிக்க குழந்தை ஹார்விக்கு சம்மன் அனுப்பியது. எனவே, அவனை அமெரிக்க தூதரகத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply