மீதொடமுல்ல அனர்த்தத்தின் குற்றவாளிகளுக்கு தண்டனை : ஜனாதிபதி
மீதொடமுல்ல அனர்த்தம் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயார் செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதற்கமைய குற்றவாளியாக இனம் காணப்படுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளபப்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஒருமாதத்துக்குள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கப்படவேண்டும் எனவும், அதற்கான தகவல்களைப் அதிகாரிகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply