பாகிஸ்தானில் மரம்-இலைகளை சாப்பிட்டு 25 ஆண்டுகளாக வாழும் முதியவர்
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் குஜ்ரன் வாலா மாவட்டத்தை சேர்ந்தவர் மெக்மூத் பட்(50). இவர் உணவு வகைகளை சாப்பிடுவதில்லை. மாறாக மரங்கள் மற்றும் இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழ்கிறார். கடந்த 25 ஆண்டுகளாக இப்பழக்கத்தை கடை பிடித்து வருகிறார். இவர் கழுதை வண்டியில் பாரம் ஏற்றி பணம் சம்பாதித்து வருகிறார். இருந்தும் விதம் விதமான உணவு பண்டங்கள் மீது அவருக்கு நாட்டம் இல்லை.
இது குறித்து அவர் கூறும் போது, 25 வயதில் நான் வறுமையில் வாடினேன். வேலை எதுவும் கிடைக்கவில்லை. எனவே சாப்பிட வழியின்றி பட்டினி கிடந்தேன். எனக்கு பிச்சை எடுக்க விருப்பம் இல்லை.
எனவே பசுமையான மரங்கள் மற்றும் இலை தழைகளை தின்று பசி ஆறினேன். அதுவே எனக்கு பழக்கமாகி விட்டது. தற்போது கழுதை வண்டி மூலம் பாரம் ஏற்றி தினமும் ரூ. 600 வரை சம்பாதிக்கிறேன். இருந்தும் சாப்பாடு மீது எனக்கு விருப்பம் இல்லை. பசி எடுக்கும் போது இலை தழைகளை சாப்பிட்டு உயிர் வாழ்கிறேன்” என்றார்.
மரம் மற்றும் இலைகளை சாப்பிட்டாலும் இவரை நோய்கள் தாக்கியது இல்லை. இதனால் அவர் இதுவரை டாக்டரிடம் சென்று மருத்துவம் பார்த்ததில்லை. இது அவரது அண்டை வீட்டினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply