வடகொரியாவை விட்டு வெளியேற முயன்ற அமெரிக்கர் கைது

உலக அளவில் அமெரிக்காவிற்கு நேரடியாக சவால் விடும் ஒரே நாடாக வடகொரியா திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், வடகொரியாவில் உள்ள பியாங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அமெரிக்க குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.டோனி கிம் என்ற அந்த அமெரிக்கர் வடகொரியாவை விட்டு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இதுபோன்று ஏற்கனவே இரண்டு அமெரிக்கர்கள் வடகொரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மூன்றாவது சம்பவம் ஆகும்.

முதல் நபர் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நபர் ஒரு ஹோட்டல் ஒன்றில் திருட முயன்றதாக கைது செய்யப்பட்டு இருந்தார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்றாவது நபர், யான்பியான் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் என்றும், சில நிவாரண திட்டங்கள் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக அவர் வடகொரியாவில் இருந்ததாக தென் கொரிய செய்தி புலனாய்வு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply