மே தினக் கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் கடும் நடவடிக்கை : துமிந்த திஸாநாயக்க
கண்டி மே தினக் கூட்டத்தில் பங்கேற்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கண்டி கட்டம்பே மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.இந்தக் கூட்டத்டதில் பங்கேற்காத கட்சி உறுப்பினர்கள் தண்டிக்கப்படுவர் என துமிந்த திஸாநாயக்க ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
கூட்டத்தில் பங்கேற்காத சகல உறுப்பினர்களும் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இம்முறை இரண்டு மே தினக் கூட்டங்களை நடத்தவில்லை. சுதந்திரக் கட்சி கண்டி கட்டம்பே மைதானத்தில் மட்டுமே மே தினக் கூட்டம் நடத்துகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைத்து கட்சியின் உறுப்பினர்களும் மே தினக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அண்மையில் கட்சியின் மத்திய செயற்குழு நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
கட்சியின் மத்திய செயற்குழு எடுத்தத் தீர்மானத்தை எவரும் உதாசீனம் செய்துவிட முடியாது.
எவரேனும் கட்சியின் தீர்மானத்தை புறந்தள்ளி வேறும் கூட்டமொன்றில் பங்கேற்றால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதனைத் தவிர வேறும் வழி எதுவும் கிடையாது என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply