உலகிலேயே மிகப் பெரிய மக்கள் மீட்புப் பணியின் ஆரம்பம் வெற்றி; மேலும் 3000க்கு அதிகமான மக்கள் 55வது படையணியினரால் மீட்பு.

பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் கொடும் பிடியில் சிக்கியிருந்த மக்களில் 35,000 பேர் இன்று (ஏப். 20) 58வது டிவிசன் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து கிடைக்கும் பிந்திய தகவல்களின் படி பல்லாயிரக் கணக்கான பொது மக்கள் பாதுகாப்புப் படையினரின் பகுதிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் ஆயிரக் கணக்கான மக்கள் காத்திருப்பதாக தெரிவருகின்றது.

புலிகளின் பாதுகாப்பு வலயத்துக்கு மேற்காக அமைந்திருந்த 3 கி.மீ. நீளமான மண் அணைக் கட்டை இன்று ( ஏப். 20) காலை கைப்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற 58வது படையணியினர் பாதையை திறந்தனர். இது மக்களை மீட்கும் படை நடவடிக்கையின் மிக முக்கிய மைல் கல்லாகும். உலகிலேயே மிகப் பெரிய மக்கள் மீட்புப் பணியும் இதுவே ஆகும்.

புலிகள் தப்பி வரும் பொது மக்கள் மீது மூன்று தற்கொலைத் தாக்குதல்கள் தொடுத்து சிறுவர்களையும் பெண்களையும் கொன்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகளின் பிடியில் இருந்து களப்புக் கடல் பகுதியினால் தப்பிச் செல்லும் பொது மக்கள் மீது புலிகள் துப்பாக்கி சூடு செய்ததால் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியும் கொல்லப்பட்டும் உள்ளனர்.

இதேவேளை, பழமாத்தளன் பகுதியிலிருந்து 3000க்கு அதிகமான மக்கள் 55வது படையணி நிலை கொண்டுள்ள சாளையின் தெற்குப் பகுதிகளுக்கு வந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply