சரத் பொன்சேகா தலைமையில் ஓர் விசேட படையணியை அமைக்க அரசாங்கம் தீர்மானம்
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை தடுக்க அரசாங்கம் புதிய வியூகம் ஒன்றை வகுக்கத் திட்டமிட்டுள்ளது.முன்னாள் இராணுவத் தளபதியும் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தலைமையில் ஓர் விசேட படையணியை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முப்படையினரை உள்ளடக்கி இந்த விசேட படையணியை உருவாக்குவது குறித்து அமைச்சரவை கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த பொறுப்பினை ஏற்றுக்கொள்ள அமைச்சர் சரத் பொன்சேகா இணங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி முப்படையினரை உள்ளடக்கி அமைக்கப்பட உள்ள இந்த விசேட படையணிக்கு சரத் பொன்சேகா தலைமை தாங்க உள்ளார்.
வெகு விரைவில் இந்தப் படையணி உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply