கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் ஒரு வருட வருமானம் ரூ.1,304 கோடி

கூகுள் இணையதள நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் சுந்தர் பிச்சை (வயது 44). தமிழரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு உயர்ந்தார்.இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6½ லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்). ஆனால் இழப்பீடு என்ற வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி). 2015-ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட தொகையை விட இது இரு மடங்கு ஆகும். மேலும் நாள் ஒன்றிற்கு இந்திய மதிப்பில் ரூ.3.52 கோடி ஊதியமாக அவர் பெற்றுள்ளார்.

கூகிளில் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னர் சுந்தர் பிச்சை, அந்த நிறுவனத்தின் வருமானத்தை பெருக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. விளம்பர வருவாயும் அதிகளவு குவிந்துள்ளது.

கடந்த ஆண்டு சுந்தர் பிச்சை தலைமையின்கீழ் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன் உள்ளிட்டவை லாபத்தை வாரி வழங்கி உள்ளன. பிற வருமானங்களும் அதிகரித்துள்ளனவாம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply