கோரிக்கையில் பின் வாங்குவது இல்லை: மாஃபா பாண்டியராஜன்

பிளவுபட்டுள்ள அ.தி.மு.க.வின் இரு அணிகளான அ.தி.மு.க. (அம்மா) அணி மற்றும் அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) அணி ஆகிய இரண்டும் இணைவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டன் அருகில் உள்ள வீனஸ் காலனியில் உள்ள முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் சனிக்கிழமை கே.பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இரு அணிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு, பேச்சுவார்த்தை தொடர்பான சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில வி‌ஷயங்கள் நிறைவேற்றப்படவில்லை. அந்த தெளிவு வந்த பிறகு பேச்சுவார்த்தை தொடங்கும். எங்களிடம் இரும்பு திரை எதுவும் கிடையாது. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியது போல் இணக்கமான சூழ்நிலை நிலவ சில வி‌ஷயங்கள் நடந்து இருக்கின்றன. சில வி‌ஷயங்கள் நடக்கவில்லை.

முக்கியமாக டி.டி.வி.தினகரன், சசிகலா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெயர்களை வைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இது முறையல்ல. சகிகலாவின் குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பது என்ற கோரிக்கையில் பின் வாங்குவது இல்லை. அந்த குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு தான் பேச்சுவார்த்தை தொடங்கும். இவ்வாறு பதில் அளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply