வடகொரிய அதிபர் இளம்பெண் போன்று கவர்ச்சியாக இருக்கிறார்: டொனால்டு டிரம்ப் கிண்டல்

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் குறித்தும், அவரது அணு ஆயுத சோதனை, ஏவுகணைகளின் சோதனை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கிம் ஜாங்- யங் மிக இளம் வயதில் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளார். மிக கடுமையான மனிதர்களை கையாண்டு வருகிறார். அவர் பதவிக்கு வந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தனது சித்தப்பாவை கொன்றார்.
தற்போது தனது ஒன்று விட்ட அண்ணனை கொலை செய்யும்படி உத்தரவிட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இவர் நல்ல மனநிலையில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. அவருக்கு 26 அல்லது 27 வயது இருக்கும். இளைஞரான அவர் தனது தந்தை மறைவுக்கு பின் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார்.

பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான இளம் பெண் போன்று இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கா மற்றும் ஐ.நா. எதிர்ப்பை மீறி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்க பகுதியை தாக்கும் வகையில் நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணை சோதனையும் நடத்தப்பட்டது.

இதனால் அமெரிக்க தீப கற்ப பகுதிக்கு போர்க்கப்பலை அனுப்பியுள்ளது. இதனால் கொரியா தீப கற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply