தனியார் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்க உளவு செயற்கை கோள்
அமெரிக்க ராணுவம் ‘என்.ஆர்.ஓ.எஸ்.-76’ என்ற உளவு செயற்கை கோள் தயாரித்துள்ளது. அது நேற்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.ஸ்பேஸ்எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பால்கன் 9 என்ற ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து அனுப்பப்பட்டது.இந்த நிறுவனம் கோடீசுவரர் லொன் மஸ்க்குக்கு சொந்தமானது. இந்த உளவு செயற்கை கோள் நேற்று (உள்ளூர் நேரப்படி) காலை 7.15 மணிக்கு செலுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து செயற்கை கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டவுடன் 10 நிமிடத்தில் பால்கன் 9 ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பி வந்து கேப்கான வரலில் பத்திரமாக தரை இறங்கியது.
இத்தகவலை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன அதிகாரி தெரிவித்தார். செயற்கை கோளை வெற்றிகரமாக நிலை நிறுத்திவிட்டு பத்திரமாக ராக்கெட் திரும்பியதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
இது தங்களது நிறுவனத்துக்கு நல்ல தருணம் என்றும் கூறினார். செயற்கை கோள் நிலை நிறுத்தப்பட்ட வீடியோவையும் வெளியிட்டார். தனியார் நிறுவன ராக்கெட் மூலம் முதன் முறையாக உளவு செயற்கை கோளை தற்போது தான் அமெரிக்கா முதன் முறையாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply