ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு பிரான்ஸ் நாட்டு அரசின் உயரிய கவுரவ விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்புக்காக தனது தொண்டு நிறுவனம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அர்னால்டின் சேவையை பாராட்டும் விதமாக பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே இந்த கவுரவ விருதை வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்ட அர்னால்ட் ,”மாசு, சுகாதாரமின்மை காரணமாக ஒவ்வொறு ஆண்டும் 7 மில்லியன் மக்கள் மரணமடைகின்றனர், அதனால் மாசு மற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்களை குறைக்க வேண்டும். இந்த பிரச்னைக்கு காரணம் மனிதர்கள், ஆதலால் நாம் தான் அதை சரி செய்ய வேண்டும். யார் தலைவன், யார் ஜனாதிபதி, யார் நாட்டை வழி நடத்துகிறார் என்பது முக்கியமல்ல, நாம் வெற்றியை நோக்கி முன்னேறி சென்று கொண்டே இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விருதை தனக்கு வழங்கியுள்ள பிரான்ஸ் அரசுக்கும், அதிபர் ஹோலண்டேவுக்கும் நன்றி தெரிவித்து டுவீட் செய்துள்ளார். பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உலக நாடுகள் நிறைவேற்ற முன்வர வேண்டும் என அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply