காஷ்மீர்: போலீசை தாக்கி 5 துப்பாக்கிகளை கொள்ளையடித்துச் சென்ற தீவிரவாதிகள்
காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியிலுள்ள ஷோபியன் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்றிரவு 9 மணியளவில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசை தாக்கிவிட்டு, பாதுகாப்பு அறையிலிருந்து 5 துப்பாக்கிகளை (ரைபிள்) கொள்ளையடித்துச் சென்றனர்.நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்க வேண்டிய 5 போலீசார் இச்சம்பவம் நிகழும் போது அங்கு இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த 5 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் துப்பாக்கியை கொள்ளையடித்துச் சென்றுள்ளதால் அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் போலீசார் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் குல்கம் மாவட்டத்தில் உள்ள கரூவூல அலுவலகத்தில் புகுந்த தீவிரவாதிகள் 5 போலீசார் உள்பட 7 பேரை கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். அதே தீவிரவாதக் குழுவினர் தான் இன்றைய செயலிலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply