அரசு எங்களை ஏமாற்ற நினைக்குமாயின் நாங்கள் அரசில் இருந்து விலகுவோம் : செல்வம் அடைக்கலநாதன்
கிழக்கு மாகாணத்திலே எங்களுக்கு உரிமை கிடைக்கவில்லை. நாங்கள் அடக்கு முறையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.இதில் இருந்து மக்கள் மீண்டெழுவதற்கு எமக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர்.கிழக்கு, அம்பாறை மாவட்டம் பலத்த பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு இருக்கின்றது என்பதனையும் அநியாயம் நடந்து கொண்டு இருக்கின்றது என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்து செயற்படாமல் இல்லை.
அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கின்ற, தீர்த்து வைக்கின்ற ஒரு பொறிமுறை அடங்காத எந்தவித தீர்வுத்திட்டத்தினையும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளாது நாங்கள் பெற்றுக் கொண்ட எதிர்கட்சி தலைவர் பதவி, என்னுடைய பதிவிகளெல்லாம் அரசுடன் இணைந்து சரணாகதி அரசியல் நடாத்துவதற்கு தந்த சன்மானமாக பலரும் சித்தரித்துக் கொண்டு இருக்கின்றனர்.
சர்வேத ரீதியாக எமது பிரச்சினை சம்பந்தமாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசும் போது எமது தலைவர் எமது மக்களின் பிரச்சினைகளை மிகவும் இறுக்கமாகவும், எந்தவித விட்டுக்கொடுப்பின்றி, தமிழ் மக்களுக்கு எதிராக அரசு அரங்கேற்றுகின்ற பிரச்சினைகள் அனைத்தையும் சுட்டிகாட்டி வருவதனை நான் நன்கு அறிவேன்.
தீர்வு திட்ட விடயத்திலே அரசு எங்களை ஏமாற்ற நினைக்குமாயின் நாங்கள் அரசில் இருந்து விலகுவோம் என்பதனை இந்த இடத்தில் கூற விரும்புகின்றேன். என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply