பிரித்தானிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

பிரித்தானிய பாராளுமன்றம் நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேஸா மே ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளைச் சாடியுள்ளார்.ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பிர்க்ஸிட் விவாதத்தின் போது தவறான கணக்குகளை கசிய விட்டுள்ளதால் அது லண்டன் தேர்தலை பாதிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜூன் 8 ஆம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பாரளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் மகாராணியை சந்தித்ததன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

பிரக்ஸிட் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு சிக்கல் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் தெரேஸா மே தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செயற்பாடு தொடர்பில் தெரேஸா மே விமர்சித்துள்ளதுடன் அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.

இந்த அதிகாரிகளின் செயற்பாடுகள் பிரித்தானியாவிற்கு அத்தியாவசியமற்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் தெரேஸா மே குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply