“சாகர”, “நந்திமித்ர” சிங்கப்பூர் பயணம்

இலங்கை கடற்படைக்குச் சொந்தமான “சாகர” மற்றும் “நந்திமித்ர” ஆகிய ஆழ்கடல் பகுதியில் கண்காணிப்புக் கடமையில் ஈடுபடும் இரு கப்பல்களும் சிங்கப்பூருக்கு சென்றுள்ளன. சிங்கப்புரில் இடம்பெறும் சர்வதேச கடல் பாதுகாப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காகவே இக்கப்பல் அங்கு சென்றுள்ளது. இதில் 34 அதிகாரிகளும் 290 கடற்படையினரும் சென்றுள்ளனர். கொழும்பு துறைமுகத்திலிருந்து நேற்று (05) இக்கப்பல்கள் புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படைப் பிரிவு அறிவித்துள்ளது.

இக்கப்பல் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையில் அங்கு தங்கியிருக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply