பிரான்ஸ் நாட்டில் ஒல்லியான மாடல் அழகிகளுக்கு தடை

பிரான்ஸ் நாட்டில் ஒல்லியான தேகவாகு கொண்ட மாடல் அழகிகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்த சட்டம் இப்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி மாடல் அழகிகள் மாடலிங் செய்வதற்கு டாக்டர்களிடம் உடல் தகுதி சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும். குறிப்பாக மாடலிங் செய்ய விரும்புகிறவர்கள் உயரத்துக்கு ஏற்ற எடை (பி.எம்.ஐ. என்று அழைக்கப்படுகிற உடல் நிறை குறியீட்டு எண்) இருக்கிறார்களா என்பதை டாக்டர்கள் ஆராய்ந்து சான்றிதழ் தர வேண்டும். 

 

முதலில் இந்த சட்டத்தின் வரைவுக்கு மாடல் அழகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போதைய சட்ட வடிவத்துக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

 

இந்த சட்டத்தை மீறி ஒல்லியான தேகவாகு கொண்ட மாடல் அழகிகளை மாடலிங் செய்வதற்கு யாரேனும் பயன்படுத்தினால் அவர்களுக்கு 82 ஆயிரம் டாலர்வரை (சுமார் ரூ.52 லட்சத்து 48 ஆயிரம்) அபராதமும், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

 

ஒல்லியான மாடல் அழகிகளுக்கு பிரான்சில் மட்டுமல்ல, இத்தாலி, ஸ்பெயின், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply