120 நாடுகளின் இந்திய தூதரக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பங்கேற்கும் 4 நாள் மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டை வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தொடங்கிவைத்தார். மாநாட்டின் 2–வது நாளான நேற்று பிரதமர் மோடி தலைமையில் வெளிநாட்டு கொள்கைகள் மற்றும் வல்லரசு நாடுகளுடன் உறவை பேணுவதில் உள்ள சவால்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் நிர்வாகம், ரஷியாவுடான உறவு, சீனாவுடனான நிலைப்பாடு, உலகளாவிய தற்போதைய சூழல் மற்றும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் குறித்து மோடி விவாதித்தார். இந்த 120 நாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, தூதரக அதிகாரிகள் தாங்கள் பணிபுரியும் நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள நட்புறவு, கொள்கைகள் மற்றும் இருநாடுகள் உறவை மேம்படுத்துவது தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply