விமானம் நடுவானில் பறந்தபோது தூங்கி விழுந்த விமானி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து லண்டனுக்கு பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 300 பேர் பயணம் செய்தனர். கேப்டன் அமீர்அக்தர் ஹாஷ்மி என்ற விமானி விமானத்தை ஓட்டினார். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானிகள் அறையில் அவர் 2½ மணி நேரம் நன்றாக அயர்ந்து தூங்கி விட்டார்.

அப்போது அந்த விமானத்தில் முகமது ஆசாத்அலி என்ற பயிற்சி விமானியும் உடன் இருந்தார். ஒரு கட்டத்தில் விமானி தூங்கி கொண்டிருக்கும் விவரம் இவருக்கு தெரியவந்தது.
விமானம் லண்டனில் தரை இறங்கும் நேரம் வந்து விட்டது. ஆனால் விமானி தூங்கிக் கொண்டிருந்தார். அதை அறிந்த பயிற்சி விமானி முகமதுஆசாத்அலி விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்.

இதனால் விமானத்தில், பயணம் செய்த 300 பேரும் உயிர் பிழைத்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பணியின்போது தூங்கிய விமானி அமீர் அக்தர் ஹாஷ்மி பணி நீக்கம் செய்யப்பட்டார். ஹாஷ்மி விமானிகளுக்கு பயிற்சியும் அளித்து வந்தார். அதற்காக தனியாக மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெற்று வந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply