மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 185 பேர் பலி

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை மொத்தம் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகப்படியாக ஜனவரி மாதத்தில் மட்டும்  55 பேர் பன்றி காய்ச்சல் பாதித்து உயிரிழந்துள்ளனர். பூனேவில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 1-ந்தேதி முதல் மே 8-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் H1N1 வைரஸ் மூலம் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என மகாராஷ்ட்ரா மாநிலத்தின் குடும்பநல மையத்தின் இணை தலைவர் முகுந்த் டிகிக்கர் தெரிவித்துள்ளார்.   

 

மாவட்டம் வாரியாக பார்க்கும் போது பூனேவில் அதிகபட்சமாக 55 பேர் பன்றி காய்ச்சல் மூலம் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாஷிக் மாவட்டத்தில் 26 பேர் மற்றும் அகமத்நகரில் 17 பேர், அமராவதி மாவடத்தில் 8 பேர், அகோலா மற்றும் சோலாப்பூர் மாவட்டங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply