முள்ளி வாய்க்கால் நினைவு தினத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்தால் எதிர்ப்போம்
இனப்படுகொலை நினைவு தினமாக முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் வருடம் தோறும்,மேமாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை உலகத்தழர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது. அனைத்து உலக தமிழர்கன் துக்க நாளாக இருக்கும் இந்த நினைவு வாரத்தை அனுஷ்டிப்பதற்கு வடக்கு மாகாண சபை இந்த முறையும் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் ஆரம்ப நாளான எதிர்வரும் 12 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் அரங்கேற்றப்பட்ட செம்மணி படுகொலை நடைபெற்ற இடத்தில் நினைவஞ்சலிகள் இடம்பெறவுள்ளன.
13 ஆம் திகதி கிழக்கு மாகாணத்திலும், 14 ஆம் திகதி ஈழத்தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட இடத்திலும், அதே நாளன்று நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் நடைபெற்ற படுகொலையை நினைவு கூரும் வகையிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ள.
15 ஆம் திகதி குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட குமுதினி படுகொலை நினைவு தூபியிலும், 16 ஆம் திகதி வவுனியாவிலும்,
கிளிநொச்சியிலும், 17 ஆம் திகதி மன்னாரிலும், இறுதி நாளான 18 ஆம் திகதி அன்று முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் நினைவு தின நிகழ்வு கள் நடைபெறவுள்ளன.
முள்ளிவாய்க்காலின் இறுதி நாள் நினைவு தினம் அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு வருவதனை தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு மீறியும் வருகை தந்தால் அவரை வெளியேறக் கோரி முல்லைத்தீவில் பெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் என வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply