இலங்கை வான்பரப்பில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் ஒத்திகை

இலங்கை வான்பரப்பில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் இரண்டு, ஒத்திகை பார்த்தன. அவ்விரு ஹெலிகளும், ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று(09) பிற்பகல் தரையிறக்கப்பட்டன இலங்கைக்கு எதிர்வரும் 11ஆம் திகதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்யவுள்ளார். அவர், மலையகத்துக்கான விஜயத்தை எதிர்வரும் 12ஆம் திகதியன்று மேற்கொள்ளவுள்ளார்.   

பிரதமர் நரேந்திர மோடியை, கொழும்பிலிருந்து, ஹட்டனுக்கு அழைத்து வருவதற்கே, இவ்விரு இந்திய ஹெலிகளும் பயன்படுத்தப்படவுள்ளன. அதன் ஒத்திகை பார்க்கும் நிகழ்வே நேற்று இடம்பெற்றுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply