இலங்கை பயணம் பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் பதிவு
புத்த மதத்தினரின் புகழ்பெற்ற புத்த பூர்ணிமா விழா கொழும்புவில் நாளை (12-ந்தேதி) முதல் 3 நாட்கள் நடக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று இலங்கை புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி தனது இலங்கைப் பயணம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் தமிழ், மலையாளம், ஆகிய இரு மொழிளிலும் பதிவு செய்துள்ளார். அதில் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணம் குறித்து மோடி கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளில் 2-வது முறையாக இலங்கை பயணம் மேற்கொள்கிறேன். இது இரு நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய உறவின் வெளிப்பாடு.
கொழும்புவில் 12-ந்தேதி வெசாக் விழாவில் பங்கெடுக்கும் போது புத்த மத தலைவர்கள், அறிஞர்களுடன் கலந்துரையாடுகிறேன். இலங்கை அதிபர் மற்றும் பிரதமருடன் இந்த விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். இரு நாடுகளுக்கும் இடையேயான புத்தமத தொடர்புகளை இது உலகுக்கு உணர்த்தும்.
இந்த பயணத்தின் போது புகழ் பெற்ற கண்டி நகருக்கும் செல்கிறேன். அங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக இந்திய நிதி உதவியுடன் திக்கோயா என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆஸ்பத்திரியையும் திறக்க உள்ளேன். அப்போது இந்திய வம்சாவழி தமிழர்களுடன் கலந்துரையாடவும் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கண்டிநகரில் உள்ள அதிபர் மாளிகையில் இலங்கை அதிபர் சிறிசேனா பிரதமர் மோடிக்கு நாளை மதிய விருந்து அளிக்கிறார்.
தமிழர் முன்னேற்ற கூட்டணியின் சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply