லிபிய கடற்பரப்பில் சிக்கியுள்ள குடியேற்றவாசிகளில் 350 பேர் மீட்பு
லிபிய கடற்பரப்பில் சிக்கியுள்ள குடியேற்றவாசிகளில் 350 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர்.லிபிய கடற்பிராந்தியத்தில் இருந்து இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 350 பேரும் மீட்கப்பட்டு திரிபோலிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கடற்படையினரும் அரச சார்பற்ற நிறுவனத்தின் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டுனீசியா, மொரோகோ, சிரியா, எகிப்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களே சப்ரதா நகரிலிருந்து 17 மைல் தொலைவில் மீட்கப்பட்டதாக லிபிய கடற்படை அதிகாரி அபோ அகில அப்டல்பெரி தெரிவித்துள்ளார்.
தாம் சப்ரதா நகரிலிருந்து 9 ஆம் திகதி பயணித்ததாக புகலிடக் கோரிக்கையாளர்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
கடற்பயணம் மூலம் ஐரோப்பாவினுள் பிரவேசிப்பதற்கான பிரதான மார்க்கமாக லிபியா காணப்படுவதால் அபாயகர கடற்பயணம் மேற்கொள்ளும் சட்டவிரோத புலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
2016 ஆம் ஆண்டில் இவ்வாறு கடல்பயணம் மூலம் 181,000 பேர் லிபியாவிற்குள் பிரவேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply