அர­சி­யல்­வா­தி­க­ளின் கால்­க­ளில் வீழ்ந்­து­தான் பதவி பெற்­றேன் என்பது என்னை அவமதிப்பதற்கு :புதிய துணை­வேந்­தர்

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் பத­வியை நான் அர­சி­யல்­வா­தி­க­ளின் காலில் வீழ்ந்­து­தான் பெற்­றுக்­கொண்­டேன் என்று யாழ். ஆயர் கூறி­யி­ருப்­பது ஆதா­ர­மில்­லாத குற்­றச்­சாட்டு என்று நிரா­க­ரித்­தி­ருக்­கி­றார் புதிய துணை­வேந்­தர். ஆய­ரின் கருத்­தைத் தான் வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றார் என்­றும் அவர் தெரி­வித்­தார். புல­னாய்­வுப் பிரி­வின் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யி­லேயே பேரா­சி­ரி­யர் சிறி சற்­கு­ண­ரா­ஜா­வுக்கு துணை­வேந்­தர் பத­வியை அரச தலை­வர் மைத்திரி­பால சிறி­சேன வழங்­க­வில்லை என்­றும் அவர் தெரி­வித்­தார்.

சில நாள்­க­ளின் முன்­னர் பொது நிகழ்வு ஒன்­றில் பேசிய யாழ். ஆயர் மேதகு ஜஸ்­ரின் பேனாட் ஞானப்­பி­ர­கா­சம், யாழ். பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் நிய­ம­னம் குறித்­துக் கார­சா­ர­மாக விமர்­சித்­தார்.

‘‘பல்­க­லைக்­க­ழ­கப் பேர­வை­யால் முத­லா­வது நப­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்­ட­வர் இருக்­கத்­தக்­க­தாக, அர­சி­யல்­வா­தி­க­ளின் கால்­க­ளில் போய் வீழ்ந்­த­வர் துணை­வேந்­த­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார். இப்­படி நிய­ம­னம் பெற்­ற­வரை மாண­வர்­கள் மதிப்­பார்­களா? விரி­வு­ரை­யா­ளர்­கள் மதிப்­பார்­களா? கல்­வி­யின் நிலை எங்கே போகி­ற­து’’­என்று காட்­ட­மா­கக் கருத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார் ஆயர்.

பல்­க­லைக்­க­ழ­கப் பேரவை உறுப்­பி­ன­ராக இருந்த யாழ்ப்­பாண ஆய­ருக்­குப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் தெரிவு முறை­கள் தொடர்­பில் விளக்­கம் இல்­லையா?முன்­னைய காலங்­க­ளில் மூன்­றா­மி­டத்­தில் இருந்­த­வர்­கள் துணை­வேந்­த­ராக நிய­மிக்­கப்­ப­டும்­போது அவர் அமை­தி­யாக இருந்­தது ஏன்?

ஒரு மதத்­தின் குரு முதல்­வ­ராக இருந்து கொண்டு தர­வு­களை ஆரா­யா­மல் இழி­வான வார்த்­தை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது மரி­யா­தைக்­கு­ரி­ய­தல்ல. தனக்கு ஏற்ற வகை­யில் அவர் கருத்­துக்­களை முன்­வைப்­பதை நான் வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றேன் -என்­றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply