பிரதமரின் சீன விஜயம் இடம்பெறுமா?
பிரதமர் ரணில் விக்கிரமரசிங்க எதிர்வரும் நாட்களில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹம்பந்தொட்ட துறைமுகம் மற்றும் முதலீட்டு வலயம் ஆகியவற்றின் ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் துறைமுகம் முதலீட்டு வலயத்தை சீனாவிற்கு வழங்குவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. சமீபத்தில் இடம்பெற்ற அமைச்சரவையில் அமைச்ர் மலிக் சமரவிக்கிரமவினால் ஒப்பந்தம் தொடர்பில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அது தொடர்பில் அனுமவதி வழங்குவதற்கு கால அவகாசம் தேவை என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
99 வருட வரிக்கு துறைமுகம் மற்றும் நிலம் பெற்றுக் கொடுப்பதற்கு ஆரம்பத்திலிருந்து ஸ்ரீலசுக எதிரப்பை தெரிவித்திருந்ததுடன் எவ்வாறாயினும் அதனை 70 வருடங்கள் வரை குறைப்பதற்கு சீனா தற்பொழுது இணக்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜனாதிபதியின் இத்தீர்மானம் காரணமாக குறிப்பிட்ட ஒப்பந்தம் தொடர்பில் இணக்கம் தெரிவிப்பதற்கு இதுவரை முன்வரவில்லை.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட சரத் அமுனுகமவின் அறிக்கை மற்றும் சமரவிக்கிரமவின் இறுதி அறிக்கை சமர்பபிப்பதற்கு கால அவகாசம் தேவை என ஜனாதிபதியின் தெரிவித்துள்ளார்.
வரி 70 வருடம் வரை குறை;பதற்கு சீனா இணக்கம் தெரிவித்ததன் நிமித்தம் பிரதமரின் உத்தியோகபூர்வ சீன விஜயத்தின் இடையே இது குறித்து இறுதி தீர்மானத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பார்த்திருந்தும் அது பிற்போடப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply