முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த பொதுமக்களுக்கு நினைவுக் கல் : பெயர் பொறிக்கும் பணிகள் ஆரம்பம்

இறு­திப்­போ­ரின்­போது முள்­ளி­வாய்க்­கால் மற்­றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளில் கொல்­லப்­பட்ட பொது­மக்­க­ளில் 500 பேரின் நினை­வாக நினை­வுக்­கல் நடப்­ப­ட­ வுள்­ளது.முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இந்த நினைவுக் கற்கள் நடப்படவுள்ளன. இதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. நடப்படவுள்ள நினைவுக் கல்லில் முதல்கட்டமாகப் பொது மக்கள் சிலரின் பெயர் பொறிக்கும் நடவடிக்கைகள் இடபெறுகின்றன.

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. அத்துடன் இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கொல்லப்பட்ட பொதுமக்கள் சிலரின் நினைவாக நினைவுக்கல் நடப்படவுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ள பகுதியில் இணைந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் என்பன நடைபெற்று வருகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply