இம்மாத இறுதிக்குள் ஜிஎஸ்பி ப்ளஸ் : அமைச்சர் ஹர்ஷ டி சில்வா

இலங்­கைக்கு ஜீ. எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை வழங்­கு­வ­தற்கு ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்­றத்தில் வெளி­வி­வ­கார மற்றும் வர்த்­தக அமைச்­சர்கள் குழு­வினால் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் இந்த மாத இறு­திக்குள் இலங்­கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை கிடைக்­க­ப்பெறும் என பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்தார்.

ஐரோப்­பாவின் 28 நாடு­க­ளுக்கு இப்­போது உள்ள சலுகை மூலம் 6600 உற்­பத்­தி­களை எந்­த­வித தீர்வை வரியும் இல்­லாது ஏற்­று­மதி செய்ய முடியும். நல்­லாட்சி அர­சாங்கம் பெற்ற மிகப்­பெ­ரிய வெற்றி இது­வெ­னவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தினால் வழங்­கப்­படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை மீண்டும் இலங்­கைக்கு கிடைக்­கப்­பெறும் வகையில் ஐரோப்­பிய பாரா­ளுமன்­றத்தில் அங்­கீ­காரம் கிடைத்­துள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரி­விக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வதுஇ

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண்டும் பெற்றுக் கொள்ளும் வகையில் நாம் மிகவும் கடி­ன­மான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் இப்­போது ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்தில் அதற்­கான அங்­கீ­கா­ரம் ­கி­டைக்­கப்­பெற்­றுள்­ளது. ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்தின் வெளி­வி­வ­கார மற்றும் வர்த்­தக அமைச்­சர்கள் குழு­வினால் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. முன்­னைய அர­சாங்­கத்தின் ஆட்­சியில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

ஆனால் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நாம் மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச்­ச­லு­கையை பெற்­றுக்­கொள்ள எடுத்த முயற்­சியில் வெற்றி கண்­டுள்ளோம். இப்­போது எமக்கு கிடைக்­க­வுள்ள இந்த வாய்ப்­புகள் மூலம் நாட்டின் வேலை வாய்ப்­பு­களை அதி­க­ரித்தல், தொழிற்­சா­லைகள் உரு­வாக்கல் மற்றும் நாட்டின் பொரு­ளா­த­ாரத்தை முன்­னோக்கி கொண்­டு­செல்ல பல­மாக அமையும்.

இந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை எமக்கு கிடப்­பதன் மூலம் 9 தொடக்கம் 10 வீத­மான தீர்வை வரி முழு­மை­யாக நீக்­கப்­படும். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இப்­போது வரையில் 28 நாடுகள் உள்­ளன. இவ் அனைத்து நாடு­க­ளுக்கும் எந்­த­வித தீர்வை வரியும் இல்­லாது எமது ஏற்­று­ம­தியை வழங்க முடியும். குறிப்­பாக எமது நாடு மீன் ஏற்­று­மதி, ஆடைகள் உள்­ளிட்ட உற்­பத்­தி­களை வழங்­கு­கின்றோம். எனினும் இப்­போது உள்ள சலுகை மூலம் 6600 உற்­பத்­தி­களை எந்­த­வித தீர்வை வரியும் இல்­லாது ஏற்­று­மதி செய்ய முடியும்.

மேலும் எதிர்­வரும் 21ஆம் 22ஆம் திக­தி­களில் வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு விடப்­படும் நிலையில் இந்த மாத இறு­திக்குள் மீண்டும் எமக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை கிடைக்கும் என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை. இப்­போது நாம் மிகப்­பெ­ரிய வெற்­றியை கண்­டுள்ளோம். நல்லாட்சி அரசாங்கமாக நாம் முன்னெடுத்த முயற்சி கள் அனைத்தும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. அதில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைத்தமையானது மிகப்பெரிய வெற்றியா கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply