வட மத்திய மாகாண சபையின் ஆட்சியை மாற்றிக் காட்டுங்கள்: மஹிந்த அமரவீர சவால்

வட மத்திய மாகாணத்தின் ஆட்சியை ஒரு வாரத்துக்குள் தனதாக்கி முடியுமானால் தங்களது அதிகாரத்தை நிரூபித்துக் காட்டுமாறு எஸ்.எம். சந்திரசேன எம்.பி.க்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர சவால் விடுத்துள்ளார்.ஐ.ம.சு.மு.யில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொரு வேளையிலும் நகைச்சுவையாக கதை சொல்லிவருகின்றனர். வட மத்திய மாகாணத்தை வீழ்த்துவதும் இதுபோன்ற ஒரு கதைதான். நாம் ஒருவாரம் அவகாசம் தருகின்றோம்.

அமைச்சுப் பதவிகள் இல்லாதபோதும், அமைப்பாளர் பதவிகள் நீக்கப்படும் போதும் ஒவ்வொருவரும் தங்களது மனக் கவலைக்கும், கோபத்துக்கும் ஒவ்வொரு விதமாக கதைகளைப் பரப்பி வருகின்றனர். இவற்றுக் கெல்லாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குழப்பமடைவதில்லையெனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். சந்திரசேன வட மத்திய மாகாண சபையை சுற்றிவளைக்கப் போவதாக கூறியிருந்தார். இது தொடர்பில் ஐ.ம.சு.மு.யின் செயலாளரிடம் வினவியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply