சைபர் தாக்குதலில் இருந்து பிரிட்டன் சுகாதார சேவைகள் சீரடைந்துள்ளது: உள்துறை மந்திரி தகவல்
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் தைவான் உள்பட 99 நாடுகளில் சுமார் 45 ஆயிரம் தாக்குதல்கள் நடந்திருப்பதாக காஸ்பர்ஸ்கை ஆய்வக தகவல்கள் கூறுகின்றன. இந்த சைபர் தாக்குதல்களால் அரசு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பிரிட்டனில் தேசிய சுகாதார சேவைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை திருப்பி அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆலோசனை நேரத்தையும் ரத்து செய்யும் கட்டாயத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் சைபர் தாக்குதல்களில் இருந்து பிரிட்டன் சுகாதார சேவைகள் சீரடைந்துள்ளது என்றும் இவை வழக்கம் போல் சீராக இயங்கி வருகின்றது என்றும் அந்நாட்டு உள்துறை மந்திரி அம்பெர் ரத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும் போது,
இங்கிலாந்தில் இயங்கும் 248 இல் 48 சுகாதார சேவை மையங்கள் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டன, இவற்றில் 42 சேவை மையங்கள் சீராக இயங்கி வருகிறது. முதற்கட்டமாக தாக்குதலை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம், எங்களது அடுத்தக்கட்ட திட்டங்கள் சைபர் தாக்குதலின் தாக்கத்தை குறைக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சைபர் தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை என அம்பெர் ரத் முன்னதாக தெரிவித்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply