உக்ரைனில் பரிதாபம்: பீரங்கி தாக்குதலில் நான்கு பேர் பலி
ரஷ்ய பிரிவினைவாதிகள் நடத்திய பீரங்கி தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் அரசு படை மற்றும் பிரிவினைவாதிகள் இடையே 2015 பிப்ரவரியில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையிலும் பதற்றமான சூழ்நிலை தொடர்கிறது. இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் விதிமுறைகளை மீறுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய தாக்குதலில் வெடிகுண்டு வீட்டின் முற்றத்தில் தாக்கியது என்றும் இதில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து பிரிவினைவாதிகள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை, எனினும் பிரிவினைவாதிகளுடன் தொடர்புடையவர் வழங்கிய தகவலில் இரண்டு குடிமக்கள் காயமுற்றிருப்பதாக தெரிவக்கப்பட்டுள்ளது. உக்ரைன் அரசு மற்றும் பிரிவினைவாதிகளிடையே 2014 ஆம் ஆண்டில் துவங்கிய முரண்பாடு, கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 10,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply