அமெரிக்க ஓய்வூதியத்தை இழக்க விருப்பமில்லை : கோட்டாபய ராஜபக்ஷ
அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்தால் அங்கிருந்து கிடைக்கும் ஓய்வூதியத்தை இழக்க வேண்டியிருக்கும் என்பதனாலும், அடிக்கடி அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய தனிப்பட்ட தேவை இருப்பதனாலும் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யப் போவதில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்துடன் தனது அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுக்க கோட்டாபய முடிவு செய்திருப்பதாக வெளியாகிய செய்தி தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், தற்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவாக பல வணிகர்கள் செயற்படுவதாக வெளியாகியுள்ள செய்திகளை மறுத்த அவர், தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போதைக்கு இல்லாத அதேவேளை, குடும்ப உறுப்பினர்கள் பலர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள், இதனால் தான் அடிக்கடி அமெரிக்காவிற்கு பயணம் செய்யவேண்டிய தேவை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சில பத்திரிகைகள் தெரிவித்திருப்பது போன்று, அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வது என்பது சிக்கலான செயல்முறை அல்லவெனவும் அமெரிக்க தூதரகத்தில் ஒரு முறையான வேண்டுகோளை தாக்கல் செய்தால் 2 வாரங்களில் அது இரத்தாகி விடும் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply