மேல் மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு.மு பெரும் வெற்றிபெறும்:அமைச்சர் டளஸ் அழகப் பெரும

மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர் பாக நடத்தப்பட்ட சுதந்திரமான கருத்துக் கணிப்பின்படி, 102 ஆசனங்களில் 63 முதல் 69 வரையான ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றுமென போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப் பெரும தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, கொழும்பு மாவட்டத்தில் உள்ள 43 ஆசனங்களில் குறைந்தது 25 ஆசனங்களை ஐ.ம.சு.முன்னணி வெற்றியீட்டுமென கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகிறது.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள 39 ஆசனங்களில் குறைந்தது 26 ஆசனங்களையும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள 20 ஆசனங்களில் குறைந்தது 12 ஆசனங்களையும் ஐ.ம.சு.முன்னணி வெற்றியீட்டும் எனவும் அந்த முடிவுகள் மூலம் வெளியாகியு ள்ளது. ஐ.ம.சு.முன்னணி 63 க்கும் 69 க்கும் இடைப்பட்ட ஆசனங்களை கைப்பற்றும் ஐ.தே.க அடங்கலான சகல எதிர்க்கட்சிகளுக்கும் 33 ஆசனங்கள் மட்டுமே கிடைக்கும்.

பக்கசார்பற்ற தரப்பினர் மேற்கொண்ட சுதந்திரமான கருத்துக் கணிப்பின் பிரகாரமே இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. 25ம் திகதியின் பின்னர் மேற்படி கருத்துக் கணிப்பின்படி ஐ.ம.சு.முன்னணி பெரு வெற்றியீட்டியிருக்கும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply