இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தொடர் தாக்குதல்: 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்

பாகிஸ்ரான் ராணுவம் ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. அதன்படி ரஜுரி மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லையில், மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் தொடர் தாக்குதலை அடுத்து எல்லையில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

ரஜுரி மாவட்டத்தில் இந்திய எல்லைக்கோட்டுக்கு உட்பட்ட நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 16.00 மணிநேரத்தில் சர்யா, கம்பா, அன்வாஸ், பந்தர் உள்ளிட்ட 4 குக்கிராமங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஜுரி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாஹித் இக்பால் சவுத்ரி தெரிவித்துள்ளார். 

 

இவ்வாறு நடத்தப்படும் தொடர் தாக்குதலை அடுத்து அந்தந்த கிராமங்களில் இருந்த மக்களில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

நவ்ஷோரா, மஞ்சகோட் பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் நேற்று முதல் நடத்தி வரும் தாக்குதலால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.

 

அந்த பகுதியில் உள்ள 51-க்கும் மேற்பட்ட பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய செயலுக்கு தக்க பதிலடி கொடுக்குமாறு மத்திய உள்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இந்திய ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply