தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்: 1700 பேர் வெளியேற்றம்
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 4-வது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் இத்தகைய செயலால் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் 1700-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் தொடர்ந்து 4-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நேற்று முழுவதும் குண்டு மழைகளை பொழிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அங்கிருந்த மக்களை வெளியேற்றிய ராணுவம் அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளது.
ரஜோரி மாவட்டத்தின் எல்லையில் மூன்று பகுதிகளில் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய தாக்குதலால் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
கடந்த மே 13-ல் நவ்ஷரா பகுதியில் பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் இருவர் பலியாகியதுடன், 3 பேர் காயமடைந்தனர். நேற்று ஒரேநாளில் எல்லைப்பகுதியில் தங்கியிருந்த 1,500-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த 2012 முதல் 2016-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தான் ராணுவம் 1,142 தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலில் 236 பாதுகாப்பு அதிகாரிகளும், 90 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2015-ல் 405 முறையும், 2016-ல் 449 முறையும் எல்லைக் கோட்டை தாண்டி வந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply