நாய்க்கு மரண தண்டனை: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வித்தியாசமான தீர்ப்பு
ஒரு குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் பாக்கர் என்ற நகரில்தான் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நாயிடம் கடிபட்ட குழந்தையின் பெற்றோர், இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீஸ் உதவி கமிஷனர் ராஜா சலீம், நாய்க்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மனிதாபிமான அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அவர் கூறினார்.
நாய் செய்த தவறுக்காக, அதன் எஜமானர் ஜமீல் என்பவருக்கு ஏற்கனவே ஒரு வார ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவரும் அந்த தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வந்துள்ளார். தற்போது, தனது நாய்க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply