ஈரான் அதிபர் தேர்தலில் தொடர்ந்து பெண்களுக்கு வாய்ப்பு மறுப்பு

மேற்காசியாவில் உள்ள மிகவும் முக்கியமான நாடு ஈரான். தற்போது அதிபராக உள்ள ஹாசன் ருஹானி பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவிப்பினை தொடர்ந்து தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.பிரச்சாரங்கள் முடிவடந்த நிலையில் மிகுந்த பரபரப்புக்கு இடையே ஈரானில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரான் மக்கள் தங்கள் நாட்டின் 8-வது அதிபரை தேர்ந்தெடுக்க உள்ளனர். அதிபர் தேர்தலோடு சேர்த்து உள்ளாட்சி தேர்தலும் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் சுமார் 1636 பேர் பதிவு செய்து இருந்தது. இதில் 137 பேர் பெண்கள். 1499 பேர் ஆண்கள். இளம் வேட்பாளர்கள் 18 பேர். முதிய வேட்பாளர்கள் 92 பேர்.

பதிவு செய்த 1636 வேட்பாளர்களில் 4 பேருக்கு மட்டும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இருப்பினும் அதில் இருந்து இருவர் பின்வாங்கி விட்டனர். இறுதியாக தற்போதைய அதிபர் ருஹானி உள்ளிட்ட இருவர் மட்டும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், அதிபர் வேட்பாளருக்கு போட்டியிட பதிவு செய்திருந்த 137 பெண்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இதனால் இந்த முறையும் அதிபர் பதவிக்கு போட்டியிட பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது.

73 வயதான அசாம் தலெகானி என்ற பெண்மணி கூறுகையில், தன்னுடைய மனு இந்த ஆண்டோடு சேர்த்து 4-வதுமுறை நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஈரானின் கார்டியன் கவுன்சில் தான் மிகவும் அதிகாரமிக்க அரசியல் சபை ஆகும். இது ஈரான் பாராளுமன்றத்தின் மேல் சபை ஆகும். இந்த சபையில் மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் ஆண்கள். இந்த கவுன்சிலில் போட்டியில் பெண்களுக்கு தடை நிலவி வருகின்றது.

இருப்பினும், பெண் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடலாம் என்று கார்டியன் கவுன்சில் அறிவித்து இருந்தது. 1997-ம் ஆண்டு முதல் பெண்கள் அதிபர் தேர்தலுக்கு போட்டிய முயன்று வருகின்றது. ஆனால் தொடர்ச்சியாக அவர்களது விருப்ப மனுக்கள் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் மனுக்களை நிராகரித்ததற்கு எந்தவொரு விளக்கமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply