இன்று முதல் GSP பிளஸ் வரிச்சலுகை
கடந்த ஆட்சிக்காலத்தில் இரத்துச் செய்யப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இன்றுமுதல் இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் 6 ஆயிரத்து 600 பொருட்களுக்கான வரிச்சலுகை இலங்கைக்கு கிடைத்துள்ளது.இதன் மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 5 ஆயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த வரிச் சலுகை 2021ம் ஆண்டுவரை வழங்க முடியும் என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங் லாய் மார்ஹூ நம்பிக்கை தெரிவித்தார்.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்துள்ளதால், இது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைவதுடன், 20 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் ஐரோப்பாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி பெறுமதி 260 கோடி யூரோக்களாகக் காணப்பட்டது. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பிய சந்தைகளை இலக்காகக் கொண்டதாகும்.
இந்த வரிச்சலுகையினால் குறைந்த பட்ச அளவில் இலங்கைக்கான வருமானம் 300 கோடி ரூபாவினால் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply