புதுமாத்தளனில் உடைந்தது புலிகளின் மண் அணை மாத்திரமல்ல

நேற்று முன்தினம் (ஏப். 20) இலங்கையின் அண்மைய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் புலிகளால் மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைக்கப் பட்டிருந்த மக்களில் அறுபதாயிரம் பேருக்கு மேல் பாதுகாப்புப் படையினரால் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் இருபதாயிரம் பேர் வரையில் அங்கு இருக்கலாம் என நம்பப்படுகின்றது. அவர்களையும் புலிகளிடமிருந்து மீட்கும் பணி தொடர்கின்றது.

பாதுகாப்புப் படையினருடனான யுத்தத்தில் தோல்வியடைந்த புலிகள் பொது மக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் பிரகடனப் படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்துக்குள் புகுந்து சிவிலியன்களை மனிதக் கேடயங்களாக்கித் தங்களைப் பாதுகாப்பதற்கு முயற்சித்தது மாத்திரமன்றி, அங்கிருந்து பாதுகாப்புப் படையினர் மீது தாக்கு தலையும் தொடுத்தனர். இதன் மூலம் புலிகள் பொதுமக்களை ஆபத்துக்கு உள்ளாக்கினார்கள்.

புலிகளுக்கு ஆதரவாக சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களிலும் இப்பொதுமக்கள் பாத்திரமானார்கள். யுத்த நிறுத்த மொன்றுக்கு வழி வகுப்பதற்காக இம் மக்களை முன்னிறுத்திப் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப் பட்டன. இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலிகளுக்கு ஆதரவாக அவர்களோடு தங்கியிருக்கின்றார்கள் என்றும் அவர்கள் மீது அரச படையினர் தாக்குதல் தொடுக்கின்றார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் தமிழ்நாட்டு அரசியல்வாதி களும் பிரசாரம் செய்தார்கள்.

ஆனால் உண்மை நிலை இப்பிரசாரத்துக்கு முற்றிலும் முரணானது. மக்கள் பாதுகாப்புப் பிரதேசங்களை நோக்கி வெளியேறுவதற்கு இடமளிக்காமல் புலிகளே அவர்களைத் தடுத்து வைத்திருந்தனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்திப் பிரசாரம் செய்யப்பட்டது. மக்கள் சுயவிருப்பின் பேரில் புலிகளுக்கு ஆதரவாக அங்கு தங்கியிருந்தார்கள் என்பதும் அப்பட்டமான பொய்.

பாதுகாப்பு வலயத்தின் ஒரு ஓரத்தில் புலிகளால் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாரிய மண் அணையைப் பாதுகாப்புப் படையினர் உடைத்து வழி ஏற்படுத்தியதும் பொது மக்கள் அதற்கூடாகச் சாரி சாரியாக வெளி யேறினார்கள். புலிகளின் பிடியிலிருந்து வெளியேறுவதற்கு எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று மக்கள் எதிர் பார்த்திருந்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது. சர்வதேச சமூகத்துக்கு இதுவரை பொய் கூறி வந்த புலி ஆதரவுப் பிரசாரகர்கள் இனியாவது உண்மை பேச முன்வர வேண்டும்.

புதுமாத்தளனில் புலிகளின் மண் அணை மாத்திரம் படையினரின் அதிரடி நடவடிக் கையால் உடையவில்லை. இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் யுத்தப் பிரதேசத் தில் சிக்கியிருக்கின்றார்கள் என்றும் அவர்கள் அங்கிருந்து வெளியேறிப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர விரும்பவில்லை என்றும் கட்டி வளர்க்கப்பட்ட பொய்த் தோற்றமும் சுக்குசுக்காக உடைந்தது. சிவிலியன்கள் அனைவரும் விரைவில் மீட்கப்பட்டுவிடுவார்கள்.

புலிகளின் அரசியல் செல்வழி அழிவுகரமானது என்பதை அவர்களைக் கண்மூடித்த னமாக ஆதரித்தவர்கள் இப்போதாவது விளங்கிக்கொள்ள வேண்டும். இனப்பிரச்சினையைச் சிக்கலாக்கியது மாத்திரமல்லாமல் கடைசிக் கட்டத்தில் மக்களின் வாழ்க்கையோடும் விளையாடியிருக்கின்றார்கள். அங்கிருந்து வெளியேறும் சிவிலி யன்கள் மீது தாக்குதல் தொடுக்கக் கடைசி நேரத்தில் கூட அவர்கள் தயங்கவில்லை.

புலிகளின் ஆயுதப் போராட்டப் பாதை தோல்வியடைந்ததும் தங்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதும் பாதுகாப்புப் படையினர் அம் மக்களை மீட்டெடுத்ததுமான நிகழ்வுகள் தமிழ் பேசும் மக்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மீளாய்வு செய்து சரியான தீர்மானத்தை மேற் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply