தேர்தலுக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இல்லை: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும், ரஷ்யாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்தில் எனக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை சூன்ய வேட்டை போன்றது என அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடந்தபோது, டொனால்டு ட்ரம்பை வெற்றிப் பெற செய்ய ரஷ்யா மறைமுகமாக காய்களை நகர்த்தியதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனை ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு களை விசாரிப்பதற்காக முன்னாள் எப்பிஐ இயக்குநர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் கொலம்பியா அதிபர் ஜூவன் மானுவேல் சான் டோஸுடன் இணைந்து ட்ரம்ப் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பி னர். அதற்கு ட்ரம்ப் கூறியதாவது:

எனக்காக ரஷ்யர்கள் யாரும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. எனக்கு நானே பிரச்சாரம் மேற் கொண்டேன். இத்தகைய குற்றச் சாட்டுகள் நாட்டைப் பிளவுப்படுத் தும். புதிய ஆட்சியில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

எல்லையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஐஎஸ் விவ காரத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி கிடைத்திருக் கிறது. அதைக் கவனியுங்கள்.

அமெரிக்க மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய் வதற்கு ஆயத்தமாக இருக்கிறேன். இந்த நாட்டை மீண்டும் நல்ல நிலைமைக்கு முன்னேற்றுவதே எனது நோக்கம். கடந்த 100 நாட்களில் பல விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலுக்கும், ரஷ்யா வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதை நம்புங்கள். இந்த விவகாரத்தை விசாரணை நடத்துவதற்காக அதிகாரி நிய மிக்கப்பட்டதை மதிக்கிறேன். அதே சமயம் அது சூன்ய வேட்டை போன்றது. புதிய எப்பிஐ இயக்குநர் விரைவில் நியமிக்கப்படுவார். அமெரிக்காவுக்கு தற்போது மருத்துவ காப்பீடு, வரி குறைப்பு ஆகியவை தான் தேவை.

நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வரி குறைப்பு இருக்கப் போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply