இலங்கை அரசாங்கமும் புலிகளும் சர்வதேச யுத்த சட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டியது அவசியம் : சர்வதேச மன்னிப்புச் சபை
இலங்கையின் வடக்கே நிலவும் யுத்தம் காரணமாக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தகவல் வெளியிட்டுள்ளது. அண்மைக்கால மோதல்களின் போது சுமார் 4500 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் உயிரிழப்புக்களை தவிர்க்கும் வகையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானதென அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமும் புலிகளும் உடனடி போர் நிறுத்தமொன்று குறித்து கவனம் செலுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர் யொலண்டா பொஸ்டர் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பினரும் சர்வதேச யுத்த சட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply